1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (15:47 IST)

இறுதிக்கட்டத்தில் தனுஷின் ‘வடசென்னை’ படப்பிடிப்பு

தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி,  டேனியல் பாலாஜி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தனுஷே இந்தப்  படத்தைத் தயாரிக்கிறார்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி வெகு நாட்களாகி விட்டது. இடையில் ஹாலிவுட் படத்தில் கூட நடித்துவிட்டு வந்தார் தனுஷ். அதன்பிறகு வேகவேகமாக நடைபெற்ற ஷூட்டிங், இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது. இன்னும் 3 வாரங்களே ஷூட்டிங்  பாக்கியிருக்கிறதாம். அதன்பிறகு, பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்தில் நடிக்கிறார் தனுஷ்.