1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:39 IST)

நிபந்தனைகளுக்கு ஓ.கே சொன்ன தனுஷ்! ரெட் கார்டை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம்!

நடிகர் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவரான தனுஷ் சில திரைப்படங்களையும் எழுதி, இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘ராயன்’ படம் வெளியான நிலையில், அடுத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படம் தயாராகி வருகிறது.

 

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மெர்சல் பட தயாரிப்பாளர்களின் படம் ஒன்றில் நடித்து 80 சதவீத படப்பிடிப்பு முடிந்தபின் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும், ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு படமும் நடித்து தராமல், அட்வான்ஸையும் திரும்ப தராமல் இழுத்தடித்ததாகவும் எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது இந்த ரெட் கார்டு தடை நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெர்சல் தயாரிப்பாளர்களின் படத்தின் மீத படப்பிடிப்பை முடிப்பது, மற்றொரு தயாரிப்பாளரிடம் வாங்கிய அட்வான்ஸை வட்டியுடன் திரும்ப தருவது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒத்துக் கொண்டுள்ளதாகவும், அதனால் ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K