திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (17:40 IST)

‘காலா’வில் தனுஷ் நடிக்கவில்லையாம்...

‘காலா’ படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹுமா குரேஷி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல், மணிகண்டன், அருள்தாஸ், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. வருகிற 7ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
 
இந்தப் படத்தைத் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இதில், ரஜினியின் சின்ன வயது வேடத்தில் தனுஷ் நடிக்க ஆசைப்பட்டதாகவும், ரஜினி ஓகே சொன்னதால் தனுஷ் நடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவல் பொய்யானது என மறுத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.