திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 2 ஜூன் 2018 (16:46 IST)

காலாவில் கடைசி 40 நிமிடங்கள் என்ன தெரியுமா?

‘காலா’வில் கடைசி 40 நிமிடங்கள் என்ன இடம்பெற்றிருக்கிறது என்ற விவரம் கிடைத்துள்ளது.
 
ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 7ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, உலகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. மும்பை, தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர்களைப் பற்றிய படம் இது.
 
‘காலா’ கேங்ஸ்டர் படம் என்று சொல்லப்பட்டாலும், ‘இதுவொரு குடும்பக்கதை தான். நம் குடும்பங்களில் நடக்கிற கதை’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். ஆனால், படத்தின் கடைசி 40 நிமிடங்கள் முழுக்க சண்டை தானாம். அனல் பறக்கும் காட்சிகளை வைத்து விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறாராம் இயக்குநர்.