செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (18:27 IST)

தனுஷின் ‘வாத்தி’ டீசர் வெளியீடு

dhanush vaathi
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது
 
இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பது தெரியவருகிறது. மேலும் இந்த படம் கல்வி துறையிலுள்ள ஊழல்கள், ஏழை மக்கள் நல்ல கல்வி கற்க முடியாத நிலை  ஆகியவை குறித்து அலசி ஆராயப்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசரில் இருந்து தெரியவருகிறது
 
தனுஷ் இந்த படத்தில் ஆசிரியராக கலக்கி உள்ளார் என்பதும் அதேபோல் ஆக்ஷனிலும் அதிரடி காட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்துள்ளார்
 
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.