செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (19:08 IST)

தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட்லுக், டீசர் எப்போது?

vaathi
தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
 
தனுஷ் நடிப்பில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்கி வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் நாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தனுஷின் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை 27ஆம் தேதியும் டீசர் ஜூலை 28ம் தேதியும் வெளியிட இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது