திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (15:21 IST)

தனுஷின் வாத்தி ரிலீஸ் எப்போது?... வெளியான லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் தனுஷ் முதல் முறையாக தமிழ், தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாளை படத்தின் முதல் லுக் தற்போது வெளியாகியுள்லது. மேலும் டீசர் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.