டிரைலரே இல்லாமல் வெளியாகும் ‘நானே வருவேன்’: காரணம் இதுதான்!
தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சுத்தமாக இல்லை என்பது தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படத்தின் டீஸர் மட்டுமே வெளியான நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டிரைலர் இல்லாமலேயே படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த படம் அதிகாலை காட்சி திரையிடப்படாது என்றும் முதல் காட்சி 8 மணிக்கு தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நானே வருவேன் படத்தின் வியாபாரம் ஏற்கனவே லாபத்துடன் முடிவடைந்து விட்டதால் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் புரமோஷன் செய்ய விரும்பவில்லை என்று கூறப்பட்டது
ஆனால் அதே நேரத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது