செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (20:39 IST)

தனுஷின் ''நானே வருவேன் ''படத்தின் முதல் விமர்சனம் இதுதான்!

nane varuven
நானே வருவேன் படத்தைப் பார்த்தை பிரபல ஊடகவியலாளர் உமர் சந்து, இப்படத்தைப் பாராட்டியதுடன் தனுஷின் நடிப்பை புகழ்ந்துள்ளார்.

செல்வராகவன் – தனுஷ் – ஐந்தாவது முறையாகவும், இவர்களுடன் யுவன் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்குப் பின், கலைப்புலி எஸ்தாணு தயாரிப்பில் உருவாகியுள படம்   நானே வருவேன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,இப்படத்தின் ரன்னிங் டைமும், சென்சார் தகலையும் படக்குழு அறிவித்தது, இதையடுத்து, யுவன் சங்கர் ராஜாவும் பின்னணி இசையை நிறைவுசெய்ததாகச் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  நானே வருவேன் படத்தைப் பார்த்தை பிரபல ஊடகவியலாளர் உமர் சந்து தன் டுவிட்டர் பக்கத்தில்,  2022 ஆம் ஆண்டின் சிறந்த திரில்லிங் படமாக நானே வருவேன் இருக்கும். இப்படத்தின் கதை, திரைக்கதயுடன் தனுஷின் நடிப்பு வலுவாக உள்ளது.  செல்வராகவன் வித்தியாசத்தை  உணர்த்தி ஆச்சர்யமளித்துள்ளார்.  தனுஷின் நடிப்பை பார்த்து வியந்தேன் இந்தியாவின் சிறந்த நடிகர் என்று தெரிவித்துள்ளார்.