புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:39 IST)

பிகில் படத்தில் நடிகராக ஏ ஆர் ரஹ்மான் – பின்னணி என்ன ?

விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் அட்லி இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் பிகில் படம் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இதற்காகப் படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஏற்கனவே மெர்சல், சர்கார் படங்கள் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே என்றப் பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

இந்தப்பாடலுக்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்தப்பாடலை ஏஆர் ரஹ்மானேப் பாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் இந்தப்பாடலுக்காக ரஹ்மான் பிகில் படத்தில் பாடியுள்ளார் என்பதுதான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாக். வழக்கமாகப் படங்களில் நடிப்பதை விரும்பாத ரஹ்மான் அட்லியின் வற்புறுத்தலால் இதற்கு ஒத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கானப் படப்பிடிப்பையும் சமீபத்தில் ரஹ்மான் முடித்துள்ளார்.