திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:14 IST)

மகன்களை ஒதுக்கிய தனுஷ் - யாரு கூட வாழ இந்த பிளான்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த ஆண்டு மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து சட்டப்படி விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில்  நடித்து வருகிறார். 
 
இதனால் ரஜினி தனுஷ் மீது கடுங்கோபத்தில் இருக்கிறராம். இந்நிலையில் சமீப நாட்களாக தனுஷ் எங்கு என்றாலும் தன் மகன்களை உடன் அழைத்து செல்வார். இதனால் அவர் மனைவியை பிரிந்தாலும் பிள்ளைகள் பாசத்துடன் இருப்பதை எல்லோரும் பாராட்டினர். 
 
ஆனால், தற்போது மனைவியை தொடர்ந்து மகன்களையும் ஒதுக்கியுள்ளார் தனுஷ், ஆம், அண்மையில் ஆசை ஆசையாய் பலகோடி மதிப்பில் கட்டிய புதிய வீட்டின் கிரஹபிரவேசத்துக்கு தன் முன்னாள் மனைவியையோ மகன்களையோ அழைக்கவில்லையாம். 
 
ஒரு பெரிய நடிகருக்கு இது நல்லதல்ல என ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும், யாரு கூட வாழ இந்த வீட்டை கட்டிருக்கீங்க? சந்தோஷத்தை துளைச்சிட்டு நிக்கப்போறீங்க என்றெல்லாம் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.