ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (21:32 IST)

வீட்டில் கிளி வளர்த்த விவகாரம் - ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியால் பிரபலமானார். இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடித்து வருகிறார். 
 
விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தன் வீட்டில் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து வந்துள்ளார். 
 
அதை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட வனத்துறையினர் சோதனை செய்து உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்க்கக்கூடாது என கூறி அந்த  கிளிகளை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தற்போது ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டள்ளது.