1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (09:16 IST)

இந்தியன் 2 திரைப்படத்தோடு மோதுகிறதா தனுஷின் கேப்டன் மில்லர்?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதை திட்டமிட்டு பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.