புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (16:38 IST)

பிரபல விளையாட்டின் பெயரில் படம்... தலைப்பைப் பதிவு செய்த தாதா 87 இயக்குனர்

உலக அளவில் பிரபலமான PUBG விளையாட்டின் பெயரில் தமிழில் படம் ஒன்று உருவாக இருக்கிறது. 

 
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் வெளியான திரைப்படம் `தாதா 87’. இந்த படம் முழுக்க முழுக்க சாருஹாசன் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவை மையமாக வைத்து, வித்தியாசமான திரைக்கதையோடு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ அதே தயாரிப்பு நிறுவனத்துக்காக, தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் பூஜை கோயில் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்றது. 
 
இந்தநிலையில், இயக்குனர் விஜய் ஸ்ரீ உலக அளவில் பிரபலமாக இருக்கும் PUBG என்ற தலைப்பில் புதிய படம் இயக்க இருக்கிறார். அந்தத் தலைப்பை அவர் சங்கத்தில் பதிவும் செய்துவிட்டார். கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆதர்ச கேமான PUBG பெயரில் தமிழில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஆக்‌ஷன் ஜானரில் இந்தப் படம் உருவாகும் எனத் தெரிகிறது.