1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (08:21 IST)

பிப்ரவரி 22ல் வெளியாகும் இரண்டு படங்கள் குறித்த தகவல்

பிப்ரவரி 1ஆம் தேதி சிம்புவின் 'வந்தா ராஜாவாதன் வருவேன்', ஜிவி பிரகாஷின் 'சர்வம் தாளமயம்', ராமின் 'பேரன்பு, 'சகா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதேபோல் அடுத்த வாரம் அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதனையடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் 'தேவ்' , 100% காதல் உள்ளிட்ட ஒருசில படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகவுள்ள இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
 
பிப்ரவரி 22ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' வெளியாகவுள்ளதாக உதயநிதி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அதேபோல் இதே தினத்தில் சாருஹாசன் நடிப்பில் உருவான 'தாதா 87' திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் தான் என்றாலும் சுமார் 20 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.