வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (16:26 IST)

ஜனவரியில் அதிரடியாக வரும் "தாதா 87"

கலை சினிமாஸ் சார்பில் கலைசெல்வன் தயாரித்துள்ள படம் தாதா 87. இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.



படத்தின் நாயகனாக சாருஹாசன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். மேலும், ஜனகராஜ், ஆனந்த் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர். 
 
சாரு ஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஓய்வுப் பெற்ற ராணுவ அதிகாரியாக ஹீரோயினின் அப்பாவாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரை வைத்துத் தான் 'தாதா 87' இயக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே இயக்குநர் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஜனவரியில் திரைக்கு வருவதாக தற்போது அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.