திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (08:00 IST)

யோகி பாபு படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கும் தேவா…தயாரிப்பாளர் இவரா?

லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கப்பட்ட வேடங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் யோகி பாபு. அவரின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் ஆதரவு பெரியளவில் கிடைக்க, அவர் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். அதில் மண்டேலா உள்ளிட்ட படங்கள் வெற்றியை ஈட்டின.

யோகி பாபு சமீபத்தில் நடித்த பொம்மை நாயகி மற்றும் லக்கி மேன் போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றன. அதையடுத்து நகைச்சுவை நடிகராகவும், கதைநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் அடுத்து கார்கி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஷாம் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கு மூத்த இசையமைப்பாளர் தேவா இசையமைக்க உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தேவா திரைப்பட பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.