திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (15:04 IST)

தாத்தா ஆனார் டி.ராஜேந்தர்.. சிம்பு சகோதரர் குறளரசனுக்கு ஆண் குழந்தை..!

நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து மீண்டும் டி ராஜேந்தர் தாத்தா ஆகியுள்ளார். 
 
ஏற்கனவே டி ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குழந்தை பிறந்த நிலையில்  கடந்த 2019 ஆம் ஆண்டு சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கும் நபிலா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
இந்த நிலையில் நபிலா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக டி ராஜேந்தர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் சிம்புவின் சகோதரருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது திரை உலக்கினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran