1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 10 மே 2021 (06:28 IST)

மே 24ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்குமா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து மே 24-ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீடிக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது
 
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 24-ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படாது என்று தெரிவித்தார். நேற்று தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பேசியபோது தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை ஊரடங்கு ஏற்படாது, அவ்வாறு ஒருவேளை முழு ஊரடங்கு அமல் படுத்தும் நிலை வந்தால் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.
 
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் உங்களிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார். எனவே இன்று தொடங்கும் ஊரடங்கு மே 24-ஆம் தேதிக்கு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதன் பின்னரும் ஊரடங்கு ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும் கருதப்படுகிறது