மருத்துவர்களுக்கு ரூ.30,000 ஊக்க தொகை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என அறிவிப்பு.
மு.க. ஸ்டாலின் முதல்வராய் பதவியேற்று நேற்று முதல் நாளாய் சட்டசபை கூடி, எம்.ஏல்.ஏ-க்கள் பதவி பிரமாணம் நடைப்பேற்றது. இதனைத்தொடர்ந்து இன்று 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தந்தனர்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் எனவும் ஏப், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000 ஊக்க தொகை வழக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.