வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 10 மே 2021 (06:27 IST)

கொரோனாவுக்கு நிதி வழங்கிய சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டு வருவதை அடுத்து பல்வேறு நபர்கள் கொரோனா தடுப்பு நிதியாக வழங்கி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சைக்கிள் வாங்க வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மதுரை சிறுவன் ஹரீஸ் வர்மன் என்பவர் கொடுத்திருந்தார் 
 
இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை கேள்விப்பட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சைக்கிள் வாங்க வைத்திருந்த ஆயிரம் ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மதுரை சிறுவன் ஹரீஸ் வர்மனுக்கு புத்தம் புதிய சைக்கிள் பழுது பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார்
 
அந்த சைக்கிளை ஹரிஸ்வர்மன் ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. முதலமைச்சரின் இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்