விமர்சனங்களுக்குக் காதுகொடுத்த டியர் காம்ரேடு – 14 நிமிஷம் கட் !

Last Modified செவ்வாய், 30 ஜூலை 2019 (13:27 IST)
ரசிகர்களின் விமர்சனத்தை ஏற்று டியர் காம்ரேட் படத்தில் இருந்து 14 நிமிடக் காட்சிகளைக் குறைத்துள்ளது படக்குழு.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஹிட் ஜோடியின் இரண்டாவது படமாக டியர் காம்ரேட் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகியது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ளார்.

அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப்படத்தைப் பற்றி ரசிகர்கள் ஒரேக் குறையாக படத்தின் நீளம் இருந்தது. படம் கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஓடுவதால் சில இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது என்ற விமர்சனத்தை அடுத்துப் படத்தில் இருந்து 14 நிமிடக் காட்சிகளைப் படக்குழு நீக்கியுள்ளது. குறைக்கப்பட்ட பதிப்பு நேற்று மாலைக் காட்சியிலிருந்து ஒளிபரப்பாகிறது.இதில் மேலும் படிக்கவும் :