அஜித்துக்கு சப்போர்ட்டாக பேசிய விஜய் டிவி பிரபலம்!

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்த நடிகர் அஜித்!
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்த நடிகர் அஜித்!
Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (17:33 IST)
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்த நடிகர் அஜித்!
நேற்று வாக்குச்சாவடியில் செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கி வைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று வாக்குப்பதிவை அடுத்து நடிகர் அஜித் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற அஜித் தனது மனைவியுடன் வாக்களித்தார். அவர் வாக்களிக்க வந்தபோது அவரது ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றும் அதையும் மீறி ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


ஒரு கட்டத்தில் அஜித்தே தனது அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்துக்கொண்டு பிறகு வந்து செல்போனை வாங்கிக் கொள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவி புகழ் டிடி அஜித்துக்கு ஆதரவாக டிவீட் செய்துள்ளார். அதில் ‘அஜித்தை நடத்திய விதம் மிகவும் சோகமானது. அஜித் அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார். ஆனால் பதிலுக்கு அவர்கள் அவரின் அடிப்படை உரிமைகளை வழங்கவேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :