வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (08:52 IST)

பவன் கல்யாண் போன்றவர்கள்தான் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள்… ஐஸ் வைத்த தயாரிப்பாளர்!

நடிகர் பவன் கல்யாண் 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடித்துள்ள வக்கீல் சாப் படத்தின் பர்மோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார் தயாரிப்பாளர் பண்ட்ல கணேஷ்.

பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை கவனம் பெற்றதை அடுத்து அதை வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இது சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பவன் கல்யாணின் ஆஸ்தான தயாரிப்பாளர் பண்ட்ல கணேஷ் தன்னை அவரின் பக்தன் என்று கூறியுள்ளார்.

அவரது பேச்சில் ‘வெங்கடாசலபதிக்கு அன்னமைய்யா, சிவனுக்கு கண்ணப்பர், ராமருக்கு ஹனுமான், அதுபோல  பவன் கல்யாணுக்கு பண்ட்ல கணேஷ் பக்தன். அவரிடம் ஒரு முறை பழகிவிட்டால் அவரை விட்டு விலக முடியாது. அடிமையாகிவிடுவோம். எத்தனையோ பேர் வருவார்கள் ஆனால் பவன் கல்யாண் போன்றவர்கள்தான் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள். ஒவ்வொருநாளும் ஓய்வின்றி 18 மணி நேரம் உழைத்து வருகிறார்.’ எனக் கூறியுள்ளார்.