திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:56 IST)

இனி சின்ராச கைல புடிக்க முடியாது! – வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வார்னர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் விஜய் பட பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்தவர். இந்தியா மீது தனிப்பிரியம் கொண்ட இவர் சென்னை வெள்ளத்தின்போது அதுகுறித்து நலம் விசாரித்து பதிவிட்டிருந்தார். டிக்டாக் தடை செய்யப்படாத காலத்தே இந்திய மொழி பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வீடியோ போட்டு வந்தார் வார்னர்.

நீண்ட நாட்கள் கழித்து தற்போது விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடி அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் வார்னர். இந்த வீடியோ போஸ்ட் செய்யப்பட்டு 1 மணி நேரத்திற்கு 7 லட்சம் லைக்குகளை கடந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.