வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (12:18 IST)

"தாத்தா வராரு..கதற விட போறாரு".. 'இந்தியன் 2' OTT ரிலீஸ் தேதி வெளியீடு..!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' ஆகஸ்ட் 9ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
 
நடிகர்  கமல் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2, கடந்த மாதம் 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.  லைகா தயாரித்திருந்த இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமூக வலைதளங்களில் படத்தின் திரைக்கதை, கமல்ஹாசனின் மேக் அப் குறித்து ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக, இரண்டாம் பாதியில் மிக நீளமாகக் காட்சிகள் வைக்கப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து 12 நிமிடக் காட்சிகளைப் படக்குழு நீக்கியது. 

 
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.