1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (09:14 IST)

பாலிவுட்டில் படுதோல்வி அடைந்த தர்பார்- ஏன் தெரியுமா ?

தர்பார் திரைப்படம் தென் இந்தியாவில் நல்ல வசூல் செய்தாலும் பாலிவுட்டில் படுதோல்வி அடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் பிரம்மாண்டமாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகியது. பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை இருப்பதால் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் வசூலில் மந்தம் ஏற்பட்டது. விமர்சனங்கள் எழுந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரையுலங்களில் சராசரியான வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்தியிலோ படம் மரண அடி வாங்கி படுதோல்வி அடைந்துள்ளது. பெரிய தொகை கொடுத்த வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இதுவரை 6 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் ரஜினி, ஏ ஆர் முருகதாஸ் மற்றும் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் வட இந்திய மக்களுக்கு நல்ல அறிமுகம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.

அக்‌ஷய் குமார் நடிப்பில் தன்ஹாஜி தி அன்சங் வாரியர் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் தர்பார் திரைப்படத்துக்கு போதிய கவனம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படமும் இந்தியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.