செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (20:55 IST)

ரஜினிகாந்த் பேசியதில் எந்த தவறும் இல்லை.. ஹெச்.ராஜா டிவிட்

துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதில் எந்த தவறும் இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியை ஒட்டி நடந்த விழாவில் ராமர், சீதையின் உருவப் படங்கள் ஆடையில்லாமல் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் இதழ் துணிச்சலாக பிரசுரம் செய்ததாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து ரஜினி கூறியது பொய் என்றும் இது பெரியாரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாகவும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், “ஈவெரா தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங்களை உடைப்பது, இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் செய்தவர் தான். ஆகவே நண்பர் ரஜினிகாந்த் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.