திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 12 மார்ச் 2020 (15:50 IST)

இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா - பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!

பிரபல பெண் நடன கலைஞர் பிருந்தா இயக்குனராக களமிறங்குகிறார்.

இந்திய சினிமாத்துறையில் முன்னணி பெண் நடன கலைஞர்களில் ஒருவரான பிருந்தா பல்வேறு ஹீரோ ஹீரோயின்களின் திரைத்துறை வாழ்வை ஒளிமயமாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது இயக்குனராக களமிறங்கவிருக்கிறார்.

அந்தவகையில் தற்போது துல்கர் சல்மான் வைத்து "ஹே சினாமிகா" என்ற படத்தை இயக்கவுள்ளார். காஜல் அஃகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மேலும், அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.