1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

இயக்குனராகும் பெண் டான்ஸ் மாஸ்டர்: காஜல் அகர்வால் நாயகியா?

ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் பிருந்தா. இவர் நூற்றுக்கணக்கான தென்னிந்திய படங்களுக்கு நடனம் அமைத்த நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்
 
இந்த படம் ஒரு அருமையான காதல் கதை என்றும், இப்படி ஒரு காதல் கதை தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் இதுவரை வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இயக்குனராக பிருந்தா அறிமுகமாகும் இந்த படத்தில் நாயகனாக துல்கர் சல்மானும் நாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர் 
 
பிருந்தாவிடம் கதையை கேட்ட காஜல் அகர்வால் சம்பளத்தை கூட பேசாமல் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தில் ஒரு சில முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே பிரபுதேவா உள்பட பல டான்ஸ் மாஸ்டர்கள் படங்களை இயக்கி உள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் பிருந்தாவும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது