1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:53 IST)

ஈழத்தமிழ் பாடகியை அறிமுகம் செய்த டி.இமான்: எந்த படத்தில் தெரியுமா?

D Imman
இசையமைப்பாளர் டி இமான் ஏற்கனவே ஒரு சில ஈழத் தமிழ் பாடகர் மற்றும் பாடகிகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஈழத்தமிழ் பாடகியை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்துள்ளார் 
 
இதுகுறித்து டி இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஈழத்தைச் சேர்ந்த பாடகி ஆஷா என்பவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் இசைத்துறையில் மிகுந்த விருப்பமுடையவர் என்றும் அவருடைய இசைத் திறமையை வியந்து நான் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பு கொடுத்தேன் என்றும் கூறியுள்ளார்
 
இந்த பாடலை கார்கி எழுதி உள்ளதாகவும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபுதேவா  நடித்த பொய்க்கால் குதிரை திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது