1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (09:05 IST)

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. ஜூலை 15 ஆம் தேதி பிரபுதேவாவின் மை டியர் பூதம் ரிலீஸான நிலையில் குறுகிய இடைவெளியில் அவரின் மற்றொரு படம் ரிலீஸ் ஆகிறது.

படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் “என்னுடைய முந்தைய படங்களைப் போல அடல்ட் கண்டெண்ட்டாக இல்லாமல் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.