ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (19:10 IST)

டிடிஃப் வாசன் மீது கடலூர் போலீஸார் வழக்குப் பதிவு!

ttf vasan
கடலூரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் மீது சூலூர்  மற்றும் போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், மதுக்கரை நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடலூர் புதுப்பாளையம் பகுதியில் சினிமா இயக்குனர் செந்தினில் அலுவலகத்தை திறப்புக்காக  டிடிஎஃப் வாசன் வந்தார். அவரைக் காண மக்கள் குவிந்தனர்.

எனவே, அப்பகுதியில் போக்குவரத்திற்கும்  பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மற்றும் 3 பேர்  மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Edited By Sinoj