திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:29 IST)

டிடிஎஃப் வாசனுடன் பைக்கில் சென்றபோது கதறி அழுத ஜி.பி.முத்து!

gb muthu
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், ஜிபி முத்துவுடன் பைக்கில் வேகமாகச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது..

தமிழ் யூடியூப் சேனல்களில் பைக் ரைடிங், பைக் சாகசம் போன்றவற்றை ஒளிபரப்பி வருபவர் டிடிஎஃப். வாசன். சமீபத்தில் இவர் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டு வாசலில் நின்றனர்.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மதுரை  ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இது வைரலாகிவருகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது