திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (08:30 IST)

அலறிய ஜி.பி.முத்து.. ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்! – டிடிஎஃப் வாசன் மீது வழக்கு!

TTF Vasan
யூட்யூபர் ஜி.பி.முத்துவை பைக்கில் வேகமாக அழைத்து சென்றது தொடர்பாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் யூட்யூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். பைக் ரைடு செய்து வீடியோ வெளியிடும் டிடிஎஃப் வாசனுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ள அதே சமயம் அவர் வேகமாக பைக் ஓட்டி செல்வது குறித்து புகார்களும் உள்ளன.


இந்நிலையில் சமீபத்தில் மற்றுமொரு பிரபல யூட்யூபரான ஜி.பி.முத்துவை பைக்கில் வைத்து அதிவேகமான ஸ்பீடில் சென்றுள்ளார் வாசன். ஜி.பி.முத்து இந்த பயணத்தில் ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோவை வாசன் அவரது யூட்யூப் பக்கத்திலேயே பதிவிட்டிருந்த நிலையில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிவேகமாக பொதுமக்கள் நடமாடும் சாலையில் பைக்கை ஓட்டியது தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.