திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (10:55 IST)

தேம்பி அழுத பிக்பாஸ் போட்டியாளர்கள்; சோகத்தில் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் எப்போ என்ன நடக்கும் என யாரும் யோசித்து பார்த்துகூட முடியாத அளவுக்கு புது புது டாஸ்க், அவ்வப்போது  புது நபர் வருகை, என எப்போதுமே பரபரப்பாக இருக்கிறது,. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆர்த்தி மட்டும் எழுந்து அழுது கொண்டிருந்தார். அதை பார்த்த வையாபுரி அதிர்ச்சி அடைந்தார்.

 
 
இந்நிலையில் புதிதாக வந்த புரொமோவில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் தேம்பி தேம்பி அழுகின்றனர். ஆனால்  அவர்கள் எதற்காக இப்படி அழுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு வேளை சினேகன் அவர்களின் உறவினர்கள் வருகையால் இப்படி ஒரு சோகமா வீட்டில் என்று ரசிகர்கள் குழுப்பத்தில் உள்ளனர்.
 
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கல் அழுகைக்கு பின்னால் பாட்டு வேறு ஓடுகிறது. எனவே அனைவரும் பாட்டை கேட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுகிறார்களா? என்று ஒன்னுமே புரியல. சினேகன் அப்பா என்று கூறி பயங்கரமாக அழுகிறார். இதனால்  சிநேகனின் அப்பா நினைவுக்கு வந்தாரா அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டதா? என்று 
 
பிக் பாஸ் வீட்டில் ஒருவர் பாக்கி இல்லாமல் அழுகிறார்கள். நேற்று முன்தினம் தான் ஆர்த்தி தனது அம்மா, அப்பாவை  நினைத்து தேம்பித் தேம்பி அழுதார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது.