1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:22 IST)

கொரொனா பரிசோதனை : புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

கொரோனா 3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில்,  சளி, தொண்டை வலி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

60 வயதிற்கு மேற்பட்ட  உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்  சிறு நீரக பிரச்சனை, உடல் பருவன் உள்ளோர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

 வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோரில் 2சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகதாரத்துறை அறிவித்துள்ளது.