வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:44 IST)

மாஸ்டர் இந்தி ரீமேக்… சல்மான் கானை இழுக்க பேச்சுவார்த்தை!

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனாவுக்குப் பிந்தைய வெளியீடுகளில் மாஸ்டர் திரைப்படம் மட்டுமே லாபத்தை எடுத்ததாக சொல்லப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தாலும் தற்போது நேரடியாக இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் ரீமேக் உரிமையை பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் முராத் கெதானி மற்றும் எண்டெமால் ஷைன்.