வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (20:42 IST)

’தோழர் ’அப்பிடீனா வேற அர்த்தமா ...? பிரபல இயக்குநர் வேதனை !

தோழர் என்ற வார்த்தை அன்பின் அடையாளம். ஆனால்  அதன் பொருளை தற்போது மாற்றி விட்டார்கள் என்று ஜிப்ஸி படத்தின் இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத்கார் தயாரித்துள்ள படம் ஜிப்ஸி . இப்படத்தில்ல் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.இதில்  இடம்பெற்றுள்ள ’வெரி வெரி பேட் ’சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. 
 
அப்போது படத்தின் இயக்குநர் ராஜூ முருகன் கூறியதாவது:
 
இப்படத்தின் அடையாளமாக இருக்கும்  வெரிவெரி பேட் பாடலை ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று நினைத்தேன். இப்படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் இல்லையென்ற்றால் இவ்வளவு தரத்தில் இப்படத்தை எடுத்திருக்க முடியாது. அதனால் அவருக்கு நன்றி . இது அரசியல் படமல்ல. ஆனால் ஒரு நியாயமான படமாக இருக்கும். என்னைபொருத்த வரையில் அரசியலும் வாழ்க்கையும் வேறு வேறு அல்ல.
 
மேலும் தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில் என்று இப்படத்தை விளம்பரம் செய்த போது உடனே சிலர் என்னிடம் என்ன சந்தோஷ் நாராயணனை தோழராக மாற்றி விட்டீர்கள் என கேட்டர்கள். ஆனால் உலகத்தில் தோழர் என்பது உன்னதமான வார்த்தை. அது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல . தற்போது அதன் பொருளை மாற்றி விட்டார்கள்.தோழர் என்பது அன்பின் வார்த்தை ... இவ்வாறு அவர் தெரிவித்தார்.