வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (10:16 IST)

மீடூன்னா மாட்டினா மாட்டிக்கலாம்னு அர்த்தம்: நடிகர் சிங்கம்புலி கலகல

பிரபல இயக்குனரும் நடிகருமான சிங்கம்புலி மீடூ குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீடூ மூலம் திரைத்துறையில் நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். பிரபல பின்னணி பாடகி சின்மயி 14 வருடங்களுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என சமீபத்தில் கூறினார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இவரது குற்றச்சாட்டிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல இயக்குனரும் நடிகருமான சிங்கம்புலி மீடூ என்றால் மாட்டினா மாட்டிக்கலாம்னு அர்த்தம், இதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்ல. ஒரு மனுஷனுக்கு இயல்பா இருக்குற விஷயத்த மறைச்சுக்குட்டு வாழ்ற போலித்தனமான வாழ்க்கையெல்லாம் வேணாம் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்திற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.