திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (18:07 IST)

காமெடி கிங் யோகி பாபுவிற்கு விரைவில் டும் டும் டும்! பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் காமெடி கிங் யோகிபாபு தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


 
தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபுவுக்கு உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு தான்.
 
சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிறது.  அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் படுபிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு. 
 
மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. 
 
இந்நிலையில் நடிகர் யோகி பாபு தன் திருமணத்தை பற்றி பேசியுள்ளார். அதாவது, என் அம்மா பெண் பார்த்து வருகிறார். அதற்காக தான் வீட்டிற்கு வந்துள்ளார் என தன்னுடைய திருமணம் குறித்து முதல் முறையாக பகிர்ந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்போதே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர்.