வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (13:01 IST)

இவரு ஹீரோ ஆன நேரம்! இவங்க ரெண்டு பேரும் முட்டிக்கிட்டாங்க...

நகைச்சுவை நடிகர் சந்தானம், கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததால், சூரி காட்டில் மழை. அவர்  சந்தானத்தின் இடத்தை நிரப்பினார்.



இதனால் எல்லா படங்களிலும் சூரி தான் என்ற அளவுக்கு ஆனது. இதனால் சூரி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இதற்கு இடையில்  யோகி பாபுவின் உடல் மொழி மற்றும் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததால், அவருக்கு  சுக்ர திசை ஆரம்பம் ஆனது. இதனால் தற்போது சூரி இல்லாத படங்களில் யோகி தான் காமெடி ஹீரோவாக வலம் வருகிறார். இதனால் யோகி கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் யோகி பாபு அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
 
தற்போது யோகிக்கும், சூரிக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. கவுண்டமணி செந்தில், வடிவேலு, விவேக் வரிசையில், சூரி, யோகி பாபு இணைந்துவிட்டதாக கோலிவுட்டில் சொல்லிக் கொள்கிறார்கள்.