கேட்டவுடன் சிரிப்புவரும் யோகிபாபுவின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

Last Updated: வியாழன், 28 பிப்ரவரி 2019 (21:18 IST)
தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. 


 
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது அணுசரன் முருகையா இயக்கத்தில் உருவாகும் பன்னி குட்டி படத்தில் நடித்துவருகிறார்.
 
யோகிபாபுவுடன் சேர்ந்து கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு 'முகமூடி', 'கிருமி', 'யுத்தம் செய்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இசையமைக்கிறார். 


 
இந்நிலையில் பன்னி குட்டி படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  


இதில் மேலும் படிக்கவும் :