என் படங்களில் காமெடி இன்னும் நிறைய இருக்கும் – வடிவேல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் தற்போது நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் விரும்பும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். தற்போது நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் மாரி செல்வராஜ் திரை படத்தில் தான் குணசித்திர நடிகனாக நடித்து இருக்கிறேன்.
மாமன்னன் திரைபடத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்த திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை.
தற்போது தான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றும் தற்போது நடித்துள்ள நாய் சேகர் படத்தில் பாடல் பாடியுள்ளதாகவும் அப்பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்றும் தெரிவித்தார்.