ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:27 IST)

2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் தேரோட்டம்! – கடலென குவிந்த பக்தர்கள்!

Tiruchendhur
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி தேரோட்டம் இன்று நடைபெறுவதால் அதை காண ஏராளமானோர் கூடியுள்ளனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணியில் நடைபெறும் ஆவணி திருவிழா விசேசமானதாகும், 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக வருகை தருவர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி திருவிழா கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெருமளவு பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 17ம் தேதி முதல் நடந்து வரும் திருவிழாவில் இன்று சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற உள்ளது.

முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வரும். அதை தொடர்ந்து வள்ளியம்மாள் தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வர உள்ளது. இரவு பல்லக்கில் 8 வீதி உலா நடைபெற உள்ளது.