2 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணி திருவிழா! – திருச்செந்தூர் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நடைபெறும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணியில் நடைபெறும் ஆவணி திருவிழா விசேசமானதாகும், 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக வருகை தருவர்.
இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 5.40 மணியளவில் ஆவணி திருவிழா கொடி கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.
அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்கின்றனர். ஆவணி 10ம் தேதி (ஆகஸ்டு 26) அன்று விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை புரிவர் என்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.