சந்தானத்தோடு இணைந்த நகைச்சுவை நடிகர் செந்தில்! அட்டகாசமான போஸ்டர்!
நடிகர் சந்தானம் தற்போது தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் கிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து உருவாகும் தமிழ் மற்றும் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். சந்தானம் 15 என்ற தற்காலிக தலைப்போடு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி சத்தமே இல்லாமல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் செந்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.