பணத்துக்காக திண்டாடும் நித்யா.. ! மகளுக்கு ஆபத்து தாடி பாலாஜி பகீர் குற்றச்சாட்டு!

Last Updated: வியாழன், 28 பிப்ரவரி 2019 (20:42 IST)
காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள தனது மனைவி நித்யாவால் தம்முடைய குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக நடிகர் தாடி பாலாஜி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 


 
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவரான தாடி பாலாஜி குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. தங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பாலாஜியும் மனைவி நித்தியாவும் வெளிப்படையாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.
 
அந்தவகையில் தற்போது மீண்டும் நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தன் மனைவி நித்யா மீது தடாலடியாக குற்றத்தை சுமத்தியுள்ளார். அதாவது, தமது மனைவி நித்யா காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் என்பவருடன் சேர்ந்துகொண்டு குழந்தையின் வாழ்க்கையை சீரழிப்பதாகவும்,  மனோஜ் மீது போலீசில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மேலும்  புகார் கொடுத்ததால் பழிவாங்கும் நடவடிக்கையில் மனோஜ் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
ஆதலால் நித்யாவால் எனது குழந்தைக்கும்  ஆபத்து இருக்கிறது.  போஷிக்கவை  போர்டிங் ஸ்கூலில் சேர்க்க விரும்பினேன், ஆனால் அதையும் நித்யா கெடுத்துவிட்டார். குழந்தை படிக்கும் பள்ளியை மாற்றி மாற்றி கேம் ஆடுகிறார். 
 
நடிகர் கமல்ஹாசன் நடத்திய டிவி நிகழ்ச்சியில், நித்யா தம்முடன் இணக்கமாக இருந்ததுபோன்று நடித்ததாகவும், தங்களை சேர்த்துவைக்கும் நோக்கம் அந்த தொலைக்காட்சிக்கு இல்லை எனவும் தாடி பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்தார் .


இதில் மேலும் படிக்கவும் :