வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (11:10 IST)

நடிகர் தாடி பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பிரபல தனியார் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்கள் மகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வதாக சமரசமாகினர். ஆனால் அதன் பிறகு கணவன்-மனைவி இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். 

இந்நிலையில் தனது கணவர் தாடி பாலாஜி குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்ததுடன் , செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த 20ஆம் தேதி மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் நித்யா பரபரப்பு புகார் அளித்தார்.
 
இந்த புகார் தொடர்பாக தாடி பாலாஜியிடம் நேற்று மாதவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தாடி பாலாஜி போலீசாரிடம் நான் எனது மனைவி நித்யாவை மிரட்டவில்லை. ஜன்னல்  உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜனவரி மாதம் நான் சென்னையில் இல்லை. வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தேன் என் மீது மனைவி பொய் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக என்னை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வருகிறேன் இவ்வாறு கூறினார்.