வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (14:36 IST)

'மீ டு' விவகாரம்: தாடி பாலாஜி கடும் தாக்கு

சேலத்தில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜி,  நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீ.டூ விவகாரத்துல சில பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறாங்களா? என்று தெரியவில்லை.
 
அப்படி இருந்தால் அது கேவலமான விஷயம். எனக்கு உடன்பாடு இல்லை. குற்றம் சொல்பவர்களை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்துறாங்க. இதனால் எல்லா பெண்களுக்கும் பாதிப்பு என்றார்.